எதை எழுதுவது ? எப்படி எழுதுவது என்று இலக்குகள் ஏதும் வைத்துக் கொள்ளவில்லை. காரணம் எழுத்துலகின் புதுமைப்பித்தனோ, பா உலகின் பாரதியோ அல்ல நான்.
இயற்கை தன் பந்திவிரித்துப் பாயாசம் பரிமாறியிருக்கும் குமரி மாவட்டத்தின் கிராமம் ஒன்றே எனது ஊர்.
வழக்கம் போல, சென்னை என்னை பணி நிமித்தம் தத்தெடுத்து தத்தளிக்க வைத்திருக்கிறது. பேருந்து நெரிசலில் திணறியும், கடின உழைப்பின் தடுமாறியும் எனது பொழுது கழிந்தாலும் வாழ்வின் சுவாரஸ்யங்களைத் தவறவிடாத மனசுடன் தொடர்கிறேன்.
ஏதேனும் என் கண்களுக்கோ, காதுகளுக்கோ, மனசுக்கோ வந்தால் இங்கே பதிவு செய்கிறேன்.
இது இலக்கியத் தளம் அல்ல, நட்பின் தளம். எனவே வருகை தருபவர்கள் தங்கள் சுவடுகளைப் பதித்துச் செல்ல அன்புடன் வேண்டுகிறேன்
சொன்னாங்க...